மட்டக்களப்பு மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகளின் முன்னாயத்த
நடவடிக்கை தொடர்பான அரச அதிகாரிகளுடான அவசர கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு
மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது..
மட்டக்களப்பு
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலைநிலை மாற்றத்தின் காரணமாக தொடர்ச்சியாக மழைபெய்து
வருகின்ற நிலையில் தாழ்நில பிரதேசங்கள் வெள்ளநீர் மூழ்கியுள்ள நிலையில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
திணைக்களம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இந்நிலையில் மீனவர்களின்
பாதுகாப்பு கருதி மீனவர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் தொழில்
நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது .
அதேவேளை கரையோர
பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு இது தொடர்பாக தகவல்கள் பிரதேச செயலக அதிகாரிகள்
ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ,அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில்
அதற்குரிய அதிகாரிகள் ஆயத்த நிலையில்
இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மாவட்ட செயலகத்தில் இன்று
நடைபெற்ற அவசர கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரச திணைகள் உயர் மட்ட
அதிகாரிகள் ,பிரதேச செயலாளர்கள்
,போக்குவரத்து , நீர்ப்பாசன திணைக்களம் , பெற்றோலியம் கல்வி திணைக்கள அதிகாரிகள் ,
பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் ,முப்படையின் உயர் அதிகாரிகள் , அரச சார்பற்ற நிறுவன
பிரதிநிதிகள் சிவில் சமூக உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்