சிங்கப்பூரும் கனடாவும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கையாள்வதற்கான 2 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இணையத் தாக்குதல்கள் தொடர்பான தகவல் பரிமாற்றங்களில் இவ் ஒப்பந்தம் கவனம் செலுத்தும்.
இணையப் பாதுகாப்புத் தரநிலையை மேம்படுத்துதல், ஆற்றலைப் பெருக்குவதில் ஒத்துழைத்தல் ஆகியவை ஒப்பந்தத்தின் மற்ற அம்சங்களாகும்.
சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியென் லூங்கும், கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒப்பந்த குறிப்பின் கையெழுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தை முன்னிட்டு திருட்ரூடோ சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள வேளையில் இந்த இணக்கக் குறிப்பு கையெழுத்தாகியுள்ளது.
கனடியப் பிரதமர் இன்று சிங்கப்பூர் வர்த்தகத் தலைவர்களையும் சந்தித்து உரையாடினார்.
சிங்டெல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், SP குழுமம், Surbana ஜூரோங், DBS குழுமம் ஆகிய பல்வேறு அமைப்புகளின் இயக்குனர்களை அவர் சந்தித்தார்.