விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைய மட்டக்களப்பு
நாவலடி முகத்துவாரம் ஆற்றுவாயிலை தோண்டும் நடவடிக்கையினை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இன்று
முன்னெடுக்கப்பட்டது
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக
விவசாயிகள் தெரிவிக்கின்றனர் .
இதன் காரணமாக தமது அறுவடை
பயிர்களை வெள்ளநீறினால்
மூழ்கியுள்ளதாக தெரிவிக்கும்
விவசாயிகள் இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட
அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர் ஆகியோருக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு
அமைய மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் ஆற்றுவாயிலை
வெட்டுவதற்கான நடவடிக்கையினை இன்று முன்னெடுக்கப்பட்டது .
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் பெக்கோ
இயந்திரம் கொண்டு வெட்டப்பட்ட மட்டக்களப்பு நாவலடி முகத்துவாரம் ஆற்றுவாயிலை
பாரவையிடுவதற்கு மாவட்ட மேலதிக அரசாங்க
அதிபர் திருமதி .சுதர்சனி சிறிகாந்த் ,
மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ஞா .,ஸ்ரீநேசன் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம் தயாபரன்
வீதி அபிவிருத்தி அதிகார சபை மாவட்ட
பிரதம பொறியிலாளர் டி . பத்மராஜா ,
மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்
மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் , மாநகர சபை உறுப்பினர்கள் மீனவ
அமைப்பின் பிரதிநிதிகள் ,விவசாய அமைப்புகளின் உறுப்பினர்கள் நேரில் சென்று
ஆகியோர் பார்வையிட்டனர்