சர்வ கட்சி கூட்டத்தை புறக்கணித்து ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நாட்டினது இறையாண்மையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலைகளுக்கு ஜனாதிபதி என்ற வகையில் பொறுப்புக் கூற வேண்டும்.
தற்போது நாட்டில் பாரதூரமான வகையில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை உருவாகியுள்ளது. ஏழு தாசாப்தங்களுக்கும் அதிகமான இலங்கை அரசியல் வரலாற்றில் தற்போது இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.
நாடாளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகள் அனைத்துமே உங்களின் சூழ்ச்சிகரமான அரசியல் நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகவே கருத முடிகின்றது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.