
குறிப்பாக டிசம்பர் பிற்பகுதியில் நிலவும் குளிர்காலமானது நேற்று (புதன்கிழமை) இரவில் அதிகளவில் உணரப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில் இங்கு காலநிலை -15 C ஆக இருக்கும் என்றும் அதிகூடிய காற்று மற்றும் குளிர் காற்று வீசும் போது -20 C வரை செல்லக்கூடும் எனவும் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 1989 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதி -12.4 C ஆக காலநிலை பதிவான நிலையில் அதன் பின்னர் தற்போதே உணரப்படுவதாக தெரிவித்துள்ளது.
எனவே மக்கள் அதிகளவில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக இரவில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
