புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பி லான நிவாரண பொருட்களை அளிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடை பெற்றது. கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்க தீர்மானிக் கப்பட்டது. அதன்படி நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சேர்ந்து பாதிக்கப் பட்ட மக்களுக்காக இதை அளிக்க முடிவெடுத்துள்ளனர். மேலும், திரைப்படக் கூட்டமைப்பிலிருந்து பலரும் தங்களால் இயன்ற அளவில் நன்கொடை அளித்து வருகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி பலரும் உதவிவரும் நிலையில்
'கஜா' புயலலினால்
30 ஏக்கரிலான பலா, தேக்கு உள்ளிட்டவை சேதமானதால், மனமுடைந்த விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த விவசாயி
திருச்செல்வம் வயது 45. 'கஜா' புயலால் இவருக்கு சொந்தமான 30 ஏக்கரிலான பலா, தேக்கு, சவுக்கு, நெல் உள்ளிட்டவை சேதமடைந்தன.
அங்கு சிகிச்சை பலனின்றி திருச்செல்வம் இன்று (திங்கட்கிழமை) காலை உயிரிழந்தார். இவர் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.