பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 47 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரை பாகிஸ்தான் அணி 3க்கு பூச்சியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 16.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.