திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோவில், புகழ்பெற்ற ஆன்மிக தலமும், சுற்றுலா தலமும் ஆகும். அங்கு இந்து அல்லாத வேற்று மதத்தினர் வழிபட அனுமதி கிடையாது.
இந்நிலையில், கடந்த 9-ந் தேதி, ஒரு பக்தர்கள் குழு பத்மநாப சாமி கோவிலுக்கு வந்தது. குழுவில் இடம்பெற்றிருந்த சில பெண்கள், தலையை முக்காடு போட்டு மறைத்து இருந்தனர். பிறகு அவர்கள் உடை மாற்றும் அறையில், பாரம்பரிய இந்து உடைகளை அணிந்து கொண்டு, கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, அவர்கள் தலையில் முக்காடுடன் இருந்தபோது, அவர்களை சில பக்தர்கள் படம் பிடித்தனர். அந்த படங்களை தந்திரிகளிடம் காண்பித்து, “அவர்கள் இந்துக்கள்தானா?” என்று சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து, அப்பெண்கள் வேற்று மதத்தினராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பாரம்பரியத்துக்கு குந்தகம் ஏற்பட்டதற்காக, பரிகார பூஜை நடத்த தலைமை தந்திரி உத்தரவிட்டார். அதன்படி, பரிகார பூஜை நடத்தி முடிக்கப்பட்டதாக கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர். இதனை விடவும் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி,திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலின் அரசுத்தரப்பு நிர்வாகியான சதீஷ் என்பவர் பெண் பக்தர்கள் பத்மநாப சாமி கோவிலுக்குள் சுடிதார் அணிந்து சாமி தரிசனம் செய்யலாம் என அறிவித்தார் இது சர்ச்சை ஆகி நீதிமன்றம் வரை சென்றது. இதன் பின்னணி யாதெனில் கோவில் நிர்வாகியான ஹரிபாலை கலந்தாலோசிக்காமல் இந்த நடவடிக்கையை அவர் எடுத்ததாகவும் கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம், தமது தீர்ப்பில் .”பத்மநாப சாமி கோவிலுக்குள் பெண்கள் சுடிதார் அணிந்து வர தடை விதிக்கப்படுகிறது என்றும் சதீஷ் கோவிலின் ஒரு பணியாளர்தானே தவிர,கோவிலின் ஆகம விதிகளை மீறும் வகையில் அவரால் உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரமில்லை.”எனவும் அறிவுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Attachments area
|
