நாட்டில்
ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவே காரணம் என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும்
கருத்து வெளியிட்ட அவர்,
“சபாநாயகர்
கரு ஜயசூரிய சுயமரியாதையை காத்துக்கொள்ளும் முகமாக தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.
நாட்டில்
ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு சபாநாயகரே காரணம். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவி விலக்க வேண்டும்.
அவ்வாறு
பதவி நீக்கம் செய்வதே நாடு எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரே தீர்வு” என ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
(கிண்ணியா செய்தியாளர்)