
கிண்ணியாவில் இயங்கி வரும் சேர்விங் கியூமனிட்டி பௌன்டேசன் அமைப்பினால் நேற்று (22) மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூரில் அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மூதூர் பிரதேச செயலாளர் எம். முபாறக் தலைமையில் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை இணங்கண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இவ் நிகழ்வில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக், சேர்விங் கியூமனிட்டி பௌன்டேசனின் தலைவர் எம்.டீ.ஜரூக் உட்பட கிராம உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
(அச்சுதன் )