LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 15, 2018

ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்



சிறுமியின் ரயில்.

சிறுமி
முதன் முறையாக 
ரயில் பயணம் செய்கிறாளென்பது
அவளது
லட்சம் சேகரமான மகிழ்ச்சியில் தெரிய வருகிறது.
அவள் 
தன் உம்மாவிடம் உரையாடும்
நிகழ்ச்சிகள் குதுகலமானவை
அவளுக்கு
பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும்
எந்த சக பயணியையும்
கவனிக்க அவளுக்கு நேரமிருக்கவில்லை
இயற்கையின் அந்தப் புரங்களை
ரயிலின் யன்னல் வழியாக
கொண்டாடி நிறைகிறாள்.
உம்மா கொடுத்த
ஒரு டம்ளர் தேநீரை
மடமடவென ஒரு மூச்சில் பருகி
வயல் வெளியின்
புழுதி வாசனையை நுகர்கிறாள்
மலைகள்
பெரு வனமென
ரயில் அவளை இழுத்துச் செல்கிறது
அவளது
உம்மா நீளுகிற சந்தோசங்களுக்கு
முற்றுப் புள்ளி வைத்தல்போல்
அடுத்த ஸ்டேஷனில் இறங்க வேண்டுமென்கிறாள்
சிறுமி விரும்பிய நுகர்ச்சிகள்
அவளை கொள்ளுதல் 
என்கிற எதிர் வினைக்கு
வந்துவிட்டதை உணர்ந்து
தற்காலிக சந்தோசங்களை
அவளது பூனைக் குட்டி
பையில் அள்ளிக்கொண்டு 
சீனக்குடா ஸ்டேஷனில்
உம்மாவின் கையைப் பிடித்தபடி
இறங்கிச் செல்கிறாள்.

00

சுங்கான் மீன் அழகி.

அவள் சுங்கான் மீன்
அழகென்றும்
அவளது பெயர் 
சுதாவென்றும் 
உங்களுக்கு நான் சொல்லியிருக்கிறேன்.
தொன்மங்கள் படரும்
கிராமத்து
வான் எல மண்ணில்
நானும் அவளும் தோழமைகளும்
வறண்ட வெயில் காலங்களில்
வற்றிக்கிடக்கும் சிற்றாறுகளில்
மீன்கள் பிடிப்பதற்காய்
காடு வெளிப்பரப்பு கடந்து
புதரிடையே
வயல் வெளியென செல்லும் போதெல்லாம் அவளிடம்
என் மெல்லிய காதலைச் சொல்லியிருக்க வேண்டும்.
காலங்கள் கடந்த ஞானம்
மிக நெருக்கமான
அந்த பொழுதுகளை மீட்டுகிறது.
உணர்வின் விசை அசைவில்
அவ்வப்போது
துயரின் படலமாய்
ஆன்மாவை உடைத்துப் போகிறாள்.
எனக்கு நான்கய்ந்து குழந்தைகள் 
அவளுக்கும் அப்படியே இருக்க வேண்டும்
மரணம் சுமந்து பாேகிற
நாட்களுக்கு முன்னம்
இந்த நூற்றாண்டு துயரத்தை
அவளிடம் சொல்லிவிட வேண்டும்
அல்லது
அவள் இந்த கிறுக்கல்களை
பார்த்துவிட வேண்டும்.
ஏ.நஸ்புள்ளாஹ்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7