LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 14, 2018

ஜெயலலிதா சிலை திறப்பு



சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று திறந்து வைகப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை ஒன்பதரை மணியளவில் திறந்து வைத்தனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்த நிலையில், அவரது 70-வது பிறந்த நாளான கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அவரது சிலை திறக்கப்பட்டது. 7 அடி உயரத்தில் திறக்கப்பட்ட இந்தச் சிலை ஜெயலலிதா முகபாவனையில் இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா சிலையை மாற்றியமைக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்தது.

அதன் அடிப்படையில், புதிதாக ஜெயலலிதா சிலை வடிவமைக்கும் பணி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரியை சேர்ந்த சிற்பி ராஜ்குமாரிடம் வழங்கப்பட்டது. 8 அடி உயரத்தில் 800 கிலோ எடையிலான வெண்கலத்தில் ஜெயலலிதா சிலையை அவர் தத்ரூபமாக வடிவமைத்தார். அந்தச் சிலை கடந்த மாதம் (அக்டோபர்) 23-ந் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

அதன்பின்னர் நேற்று முன்தினம் இரவு ஜெயலலிதாவின் பழைய சிலை அகற்றப்பட்டு, புதிதாக பீடம் அமைத்து புதிய சிலை அதில் நிறுவப்பட்டது.
Attachments area



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7