
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று 3012 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 4,072 கனஅடியாக உயர்ந்தது. தற்போதும் நீர்வரத்து மேலும் அதிகரித்து 4,130 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து நேற்று காலை 13ஆயிரத்து 850 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று காலை 5ஆயிரத்து 850 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருவது சற்றே நிம்மதி அளிக்கின்றது.