The green country A Clean environment என்ற தொனியில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களின் தலைமையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கீழ் இடம் பெற்ற தேசிய மட்டத்திலான குறுந்திரைப்பட
“soba chalana sithuwam போட்டியில் சிறந்த நான்கு‘Merit
award’ 'குறுந்திரைகளுள் மூன்று சிங்கள குறுந்திரைகளோடு மட்டக்களப்பு கலைஞர்களின்
O2 zone என்ற தமிழ் குறுந்திரையும் தெரிவாகியுள்ளது.
மட்டு நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தேசிய ரீதியாக 48 போட்டியாளர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் இக் குறுந்திரை O2 zone தெரிவாகி இருந்தது குறிப்பிடதக்கது.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் பிரதி அமைச்சர் மன்னப்பெரும, அமைச்சின் செயலாளர் அனுர டிசாநாயக்க இவர்களோடு இலங்கை கலைஞர்களான ஆரிய ரத்ன அத்துகல, மாலக தேவபிரிய சிறில் உபுல் குமார, கிறிஷ்டி செல்டன் பெனார்ண்டோ ஆகியோர் மத்தியில் இவ் விருதினை இக் கலைஞர்கள் பெற்றிருந்தனர்.
இக் குறுந்திரைக்கு கதை திரைக்கதை இயக்கம் எஸ்.மனோஜ், ஒளிப்பதிவு காட்சி விளைவு வர்ணம் சு.ஹிந்துஷன் மற்றும் படத்தொகுப்பாளர் எஸ்.கிருஷாந் இசையமைப்பாளர் ஜே.ஜெரோம், உதவி இயக்குனர் பி.நிருக்ஷன் தங்கள் உணர்வு பூர்வமான நடிப்பால் ஆழுமைபடுத்திய ரி.கிசான் அவரோடு எம்.ஜஷ்யந், என்.மதுராங்கன், பி.அனோக்ஷன், ஆங்கில கதை மொழிபெயர்ப்பு பி.அக்ஷா பின்ணணி குரல் உதவிய மனோஜ், பிரஸன்னா அனைவரும் இக்குறுந்திரைப்படத்தில் பணியாற்றியிருந்தனர்.