கனடாவின் Fort St. John பகுதியில் 4.2- ரிக்டர் அளவில் நேற்று(வியாழக்கிழமை) இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. தெற்கே 16 கி.மீ. தொலைவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இருப்பினும், குறித்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு உயிர்ச் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், குறித்த நிலநடுக்கமானது Fort St. John பகுதியை தொடர்ந்து டெய்லர், செட்விண்ட் மற்றும் டாவ்சன் கிரீக் ஆகிய பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.