இலங்கையில் பல்வேறு அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டு வருவதன் காரணத்தால் உடனடியாக (இன்று 9-11-2018 நள்ளிரவு) பாராளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தியோக பூர்வ ஆவணத்தில் ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன சற்று முன்னர் கையொப்பம் இட்டுள்ளார்.இன்று 9-11-2018 நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்ட வர்த்தமானி பத்திரிகையானது, அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி அவர்களினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷேவினால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை நிலவுவதால் சபாநாயகர் தமக்கு சாதகமாக இல்லாத காரணத்தினாலும் மஹிந்தவுக்கு ஆதரவான நிலை இல்லாததனாலும் ஜனாதிபதி இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறியமுடிகிறது. ஜனாதிபதியின் இந்த முடிவால் இலங்கை அரசியலில் மேலும் குழப்பகரமான நிலைமை ஏற்படும் என தெரியவருகின்றது.
இலங்கை பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி 5 நடை பெறவுள்ளது புதிய பாராளுமன்றம் ஜனவரி 17ல் கூடவுள்ளது.
இலங்கை பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி 5 நடை பெறவுள்ளது புதிய பாராளுமன்றம் ஜனவரி 17ல் கூடவுள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணியுடன் பாராளுமன்றம் கலைந்தாலும் ஜனாதிபதி மைத்ரிபாலசிரிசேனவால் உருவாக்கப்பட்ட காபந்து அரசாங்கம் தொடர்ச்சியாக பதவியிலிருக்கும் என்றும் அறியக்கிடைத்துள்ளது.