
ஜேர்மனிக்கு அடுத்ததாக ஜமால் கஷோக்கியின் படுகொலை காரணமாக சவுதிக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியியுள்ள இரண்டாவது நாடு டென்மார்க் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவிற்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதை வெளியுறவு அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது என டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டெர்ஸ் சாமுவேல்சன் தெரிவித்துள்ளார்.
ஜமால் கஷோக்கியின் கொலையுடன் தொடர்புடைய 18 பேரும் தமது நாட்டிற்குள் நுழைவதற்கு திங்களன்று ஜேர்மனி தடைவிதித்திருந்தது.
ஓக்டோபரில் சவுதி அரேபியாவிற்கு ஆயுத விற்பனைகளை இடைநிறுத்தம் செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஜேர்மனி அழைப்பு விடுத்தது. ஆனாலும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மைக்ரோம் இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

