திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் வாசஸ்தலத்தின் முன்னிலையில் இன்று குறித்த நபரை பொலிஸார் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சேனையூர், சம்பூர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் திருமணம் முடித்து ஒரு பிள்ளைக்கு மாதாந்தம் 6,000 ரூபாய் செலுத்திய நிலையில் 5 மாதங்களாக 30,000 ரூபாயினை தாபரிப்பு பணமாக செலுத்தாது தலைமறைவாக இருந்த நிலையிலே கைது செய்யப்பட்டுள்ளார்.(ந)