தமிழீழ மண்ணெங்கும் நினைவுச்சின்னங்களாய், சிலைகளாய், துயிலுமில்லமாக மாவீரர்கள் குடிக்கொண்டுள்ளனர். அவர்கள் ஈழமண்ணின் விதையாகவும், ஒளிமயமான சுடர் ஒளியாகவும், எம் இனத்தின் பாதுகாப்பு அரணாகவும் இடம் பெறுகின்றனர். எமது தேசமெங்கும் சர்வவியாபியாகி மாவீரர் நிற்கின்றனர். புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமான மாவீரர்கள் வானளாவிக் கால, நேர, இடம், தூர எல்லைகளைக் கடந்து எமது உணர்வோடும் கனவோடும் கலந்துவிட்டனர்.
மாவீரர்நாள் தமிழீழத்தின் தேசியநாள் என்பதை யாவரும் அறிவர். அன்று நாம் துயிலும்மில்லம் சென்று மாவீரர் கல்லறைகளுக்கு விளக்கேற்றுகின்றோம். மனித உடல் கிடக்கும் கல்லறை தெய்வத்தின் இருப்பிடமாகப் பண்டுதொட்டு நம்பப்படுகிறது. பெரும்பாலான வணக்கத்தலங்கள் கல்லறைகலாகவே ஆரம்பித்தன. நாளடைவில் அவை கோயில்களாக மாறிவிட்டன. மக்கள் காட்டும் மதிப்பும், மரியாதையும் அவர்கள் கல்லைரையில் உரைவோர் மீது இயல்பாக கொண்டுள்ள பாசமும், பரிவும் கோயிலாக கல்லறைகள் மாறுவதற்குக் காரணமாகின்றன.
இப்போது மாவீரர் நாளானது மாவீரர் எழுச்சி நாளாகத் தமிழீழத்திலும், ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் . விசுவமடு, கோப்பாய் போன்ற துயிலுமில்லங்களிலும் விதைக்கப்படடுள்ளன. “உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் – அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
சுதா-கனடா