தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட இன்னும் இந்தியாவின் பல மொழிகளிலும், வௌிநாடுகளிலும் ரிலீஸாகிறது. தற்போது படத்தின் புரொமோஷன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வௌியாகும் போது, அவர்களின் படங்களின் டிக்கெட் விலை, தியேட்டர் கட்டணத்தை விட அதிகமாக விற்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழும். சமீபத்தில் வௌியான சர்கார் படமும் இதில் சிக்கியது.
இந்நிலையில், ரசிகர் மன்ற காட்சி என்ற பெயரில் சில நிர்வாகிகள் 2.0 படத்திற்கு, 200 ரூபாய் டிக்கெட்டை, 2000, 3000 என்று விற்று வருவதாக தகவல் வௌியாகி உள்ளது. இதற்கு முடிவுகட்டும் வகையில் ரஜினி, தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வௌியிட்டுள்ள அறிக்கை :
ரஜினி நடித்து வௌிவர இருக்கும் 2.0 படத்தின் ரசிகர் மன்ற காட்சி தொடர்பாக கீழ்கண்ட அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட வேண்டும்.
1. தியேட்டர்களில் ரசிகர் மன்ற காட்சி என்று கூறி பெறப்பட்ட டிக்கெட்டுகளை வௌியே யாருக்கும் விற்க கூடாது.
2. ரசிகர்களிடமிருந்து தியேட்டர்கள், இருக்கைக்கு ஏற்ப நிர்ணயித்த கட்டணத்தை தவிர, வேறு எந்த கூடுதல் கட்டணங்களையும் ரசிகர்களிடமிருந்து வசூலிக்க கூடாது. இதை மீறி செயல்படும் மன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.