மட்டக்களப்பு மாவட்ட
நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு நடத்தப்பட்ட சிங்கள
மொழி தொடர்பான பயிற்சி நெறியின் இறுதி நாள்
நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சினால் நடைமுறை படுத்தி வருகின்ற தேசிய மொழி கொள்கை வேலைத்திட்டத்தின் தமிழ் மொழி அரச அலுவலக அதிகாரிகளுக்கு சிங்கள மொழியும் ,சிங்கள மொழி அரச அலுவலக அதிகாரிகளுக்கு தமிழ் மொழியும்
கற்பிக்கும் முறைமையினை தேசிய மொழி மொழிக்கல்வி
மற்றும் பயிற்சி நிறுவனம் நாடளாவிய ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது .
தேசிய
மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மாவட்ட இணைப்பாளர் வி .சந்திரகுமார் ஒழுங்கமைப்பில் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி
நிறுவனத்தின் உதவிபணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் தலைமையில் ,சிங்கள மொழி தொடர்பான
12
நாள்
பயிற்சிகள் நடாத்தப்பட்டு பயிற்சிகளை நிறைவு செய்த உத்தியோகத்தர்களுக்கு
சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்கள பிரதான மண்டபத்தில்
நடைபெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு
மாவட்ட செயலக மேலதிக காணி அரசாங்க அதிபர்
திருமதி நவருபரஞ்சனி முகுந்தன் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி
நிறுவனத்தின் உதவிபணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன
திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)