கந்தசஷ்டி விரதத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் செவ்வாய்கிழமை(13) இந்து ஆலயங்களில் சூரசம்கார நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் வாழைச்சேனை பேத்தாழை ஸ்ரீ முருகன் ஆலயத்திலும் சூரசம்காரம் இடம்பெற்றது.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான கந்தசஷ்டி விரதம் செவ்வாய்க்கிழமை சூரசம்காரம் இடம்பெற்றதுடன், புதன்கிழமையுடன் விரதம் நிறைவு பெற்றது.
கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்கார நிகழ்வுகளை பார்வையிடுதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் விரதத்தினை அனுஸ்டிக்கும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது வசந்த மண்டப பூசை இடம்பெற்று முருகப் பெருமான் உள் வீதி வலம் வந்து பின்னர் சூரபத்மன் வதம் செய்ததும் குறிப்பிடத் தக்கது. கந்தசஷ்டி விரத பூசைகள் யாவும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.பு.ரதிசர்மா குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
முருகப் பெருமானுக்குரிய விரதங்களில் கந்தசஷ்டி விரதம் முக்கிய இடம் வகிக்கின்றது. அந்த வகையில் சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த திருவிளையாடலையே கந்தசஷ்டி விரதம் எனக் கொள்கின்றோம்.