ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச கலாசார இலக்கிய விழாவும் "நானிலம்" "புதிய மழை" சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும் கலைஞர் கௌரவிப்பும் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச கூட்டுறவு செளபாக்கியா விழா மண்டபத்தில் இன்று காலை 9.30 ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு ந வில்வரெட்ணம் தலமையில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் அவர்கள் சிறப்பதிதியாக கலந்து சிறப்பித்தார் இந்நிகழ்வில் கலைத்துறைக்கு பங்காற்றிய பல கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்