சென்னையில் :
தற்கொலைக்கு முயன்ற மனைவியை கணவன் கொளுத்தியதால் பரபரப்பு
சென்னை ராமாபுரத்தில் தற்கொலைக்கு முயன்ற மனைவியை கணவன் கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. குடும்ப பிரச்சனையால் மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை செய்துகொள்வதாக மனைவி தாரணி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் பாண்டியன் தாரணியை கொளுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார். தீக்காயம் அடைந்த தாரணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் :
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பகுதியில் மனைவி மற்றும் மாமியாரை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்துள்ளார். குடும்ப பிரச்சையால் மனைவி சுமதி, மாமியாரை விஜயலட்சுமி ஆகியோரை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு பாபுவும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இராமநாதபுரத்தில்:
கமுதி அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவியே, கணவரை வெட்டி கொலை செய்துவிட்டு தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிவிட்டு தலைமறைவான மனைவியை போலீசார் இன்று கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கீழகொடுமலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த போதும்பொன்னு என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து கணவர் ஆறுமுகம், மனைவி போதும் பொன்னு இடையே அடிக்கடி குடும்ப தகறாறு ஏற்பட்டு வந்தது. கணவர் ஆறுமுகம் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதும், மனைவியை அடித்து துன்புறுத்துவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இதனால் மனைவி போதும்பொன்னு கணவன் ஆறுமுகம் மீது மிகவும் வெறுப்பாக இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.