பல்லேகலை மைதானத்தில் கடந்த 14ஆம் திகதி தொடங்கிய இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இதில் முதல் இன்னிங்ஸில் முறையே இங்கிலாந்து 290 ஓட்டங்களையும், இலங்கை 336 ஓட்டங்களையும் எடுத்தன. 46 ஓட்டங்கள் பின்தங்கியஇங்கிலாந்து அணி 2ஆவது இன்னிங்ஸில் அணித் தலைவர் ஜோ ரூட்டின்சதத்தின் உதவியுடன் 346 ஓட்டங்களைக் குவித்தது.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 301 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி, எதிரணியின்பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 243 ஓட்டங்களை மாத்திரம் பெற்று57 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
பல்லேகலை ஆடுகளம் சுழலின் சுவர்க்கமாக திகழ்ந்ததால் இங்கிலாந்துசுழற்பந்து வீச்சாளர்களான ஜெக் லீச், மொயீன் அலி, ஆடில் ரஷித்ஆகியோரின் சுழல் வலையில் இலங்கை வீரர்கள் முழுமையாக சிக்கிக்கொண்டனர்.
இப்போட்டியில் ஜொக் லீச் 8 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 6 விக்கெட்டுக்களையும், ஆடில் ரஷித் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
ஏற்கனவே, முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்கள்வித்தியாசத்தில் வென்று இருந்தது. இப்போட்டியில் மொயீன் அலி 8 விக்கெட்டுக்களையும், ஜெக் லீக் மற்றும் ஆடில் ரஷித் ஆகியோர் முறையே 5, 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைஇங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. இலங்கைமண்ணில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை வெல்வது கடந்த 17 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2001ஆம் ஆண்டுநசார் ஹுசைன் தலைமையிலான இங்கிலாந்து அணி இலங்கையில் டெஸ்ட்தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. அதுமாத்திரமின்றி, ஜோரூட் தலைமையில் இங்கிலாந்து அணி கைப்பற்றிய முதல் வெளிநாட்டுதொடரும் இதுதான்.
இதுஇவ்வாறிருக்க, இந்த டெஸ்டில் இரு அணிகளின் இரண்டுஇன்னிங்ஸையும் சேர்த்து மொத்தம் 38 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சாளர்களே கைப்பற்றியிருந்தனர்.
141 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு டெஸ்டில் சுழற்பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய போட்டியாக இதுபதிவானது. இதற்கு முன்பு 1969ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் 37 விக்கெட்டுகளைசுழற்பந்து வீச்சாளர்கள் சாய்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
இதேநேரம், இந்த டெஸ்டில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களான ஜெக்லீச், மொயீன் அலி, அடில் ரஷித், ஜோ ரூட் ஆகிய 4 பேரும் இணைந்துஎதிரணியின் 19 விக்கெட்டுகளை அள்ளினர். ஒரு வீரர் மட்டும் ரன்–அவுட்ஆனார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு விக்கெட்டும் எடுக்காமல்அந்த அணி வெற்றி காண்பது இது 3ஆவது தடவையாகும். 1956ஆம் ஆண்டுஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 1952ஆம் ஆண்டுஇந்தியாவுக்கு எதிராகவும் அந்த அணி இவ்வாறு வெற்றி பெற்றமைகுறிப்பிடத்தக்கது.
சுழற் பந்துவீச்சில் அதிக விக்கெட்டுக்கள் கைப்பற்றிய டெஸ்ட் போட்டிகள்
விக்கெட்டுக்கள்;அணிகள்;இடம் ;வருடம்
38 இலங்கை எதிர் இங்கிலாந்து பல்லேகலை 2018
37 இந்தியா எதிர் நியூசிலாந்து நாக்பூர் 1 969
35 இந்தியா எதிர் அவுஸ்திரேலியா கொல்கத்தா 1956
35 இந்தியா எதிர் பாகிஸ்தான் பெங்களூர் 1987
(கிண்ணியா செய்தியாளர்)