இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார். கல்முனையில் ஏகாம்பரம் வீதி இரண்டு மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்படுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் அரம்பித்து வைக்கும் நிகழ்வு கல்முனை மாநகரசபை உறுப்பினர் க.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பாராமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து பேசிய பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரெட்ணசிங்கம்...
கடந்த காலங்களில் நாம் செய்த தியாகங்களையும், இழப்புக்களையும் சிலர் அபிவிருத்தி என்ற மாயையினால் மூடி மறைக்கப்பார்க்கின்றனர். பொதுமக்கள் அபிவிருத்தி, வேலைவாய்ப்பு பற்றிபேசுகின்றனர். இன்று எமக்கான காலம் கனிந்திருக்கின்றது. அரசியல் தீர்வோடு சேர்த்து எமக்கான அபிவிருத்தியம் கிடைக்கும்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந் நிலையில் விமர்சனங்கள் எமக்கு பின்னடைவை ஏற்படுத்தும். கூட்டமைப்பை பிளவுபடுத்தவும் அதிலிருந்து மக்களை அந்நியப்படுத்தவும் புலனாய்வுப்பிரினரும் தகவல்களைத் திரட்டிவருகின்றனர். தமிழ் மக்கள் உரிமையோடு கூட்டமைப்பை தட்டிக்கேட்கலாம். ஏனைய கட்சிகளை தமிழ் மக்கள் ஏன்என்று தட்டிக்கேட்க முடியாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் இரத்தத்தில் ஊறிவிட்ட ஒரு கட்சியாகும். துமிழ் மக்கள் ஒன்று பட்டு கூட்டமைப்போடு கைகோர்த்து நிற்கவேண்டும்.
இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நினைத்திருந்தால் அமைச்சுப்பதவிகளைப் பெற்றிருக்கமுடியும். சம்பந்தன் ஐயாவிடம் அமைச்சுப்பதவி எடுக்கச் சொல்லியும் கேட்டிருந்தார்கள். இந் நாட்டின் நிதி அமைச்சு உட்பட முக்கியமான பதவிகளை எம்மால் எடுத்திருக்க முடியும். எமது நோக்கம் பதவியல்ல. தமிழ் மக்களுக்கான ஒரு நியாயமான அரசியல் தீர்வாகும்.
சம்பந்தன் ஐயா வெளிநாட்டுத்தூதுவர்களைக் கூப்பிட்டு எமது நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருந்தார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றியும் தெளிவுபடுத்தியிருந்தார். இதையெல்லாம் அரசில் இருந்து கொண்டு செய்திருக்கமுடியாது. குறிப்பாக தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றி வருகின்ற விமர்சனங்கள், அவதூறுகள் தொடர்பில் மக்கள் கவனமாக இருக்கவேண்டும். எமக்கான அரசியல் தீர்வு வரும் வரை காத்திருக்க வேண்டும்.
அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் இனப்பற்றும், மொழி;ப்பற்றும், கொள்கையில் உறுதியும் கொண்டவர்கள். இந்த உணர்வு உங்களிடம் இருக்கும் வரை எவரிடம் இருந்தும் உங்களைப் பிரிக்கமுடியாது என்றார்.
செ.துஜியந்தன்