சென்னை, தி.நகர் மண்டல குடிமைப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் சி.நயினார் பிள்ளை, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியராகவும், தூத்துக்குடி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் இரா.செழியன், சேலம் வருவாய் கோட்டாட்சியராகவும், நெல்லை, தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் (நில எடுப்பு) முன்னாள் தனித்துணை ஆட்சியர் சீ.மஹேஸ்வரன், சேலம் மாவட்டம், சங்ககிரி, வருவாய் கோட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, சென்னை பெருநகர மாநகராட்சி வடக்கு மண்டல நிர்வாக துணை ஆணையர் அ.லலிதா, சேலம் மாவட்டம், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியராகவும், திருச்சி கலால் உதவி ஆணையர் சி.ராஜ்குமார், காஞ்சீபுரம் மாவட்டம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு அண்மையில் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயரதிகாரிகளாக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் உள்பட 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து
ஈரோடு கலெக்டராக இருந்த பிரபாகர் கிருஷ்ணகிரிக்கும், மதுரை கலெக்டராக இருந்த வீர ராகவ ராவ் ராமநாதபுரத்திற்கும், சென்னை கலெக்டராக இருந்த அன்புசெல்வன் கடலூருக்கும், கிருஷ்ணகிரி கலெக்டராக இருந்த கதிரவன் ஈரோட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் கலெக்டராக இருந்த நடராஜன் மதுரைக்கும், அண்ணா தொழிலக நிறுவனத்தின் இணை இயக்குநராக இருந்த சண்முக சுந்தரம் சென்னை கலெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
பள்ளிகல்வித்துறை செயலாளர் உதய சந்திரன் தொல்லியல் துறைக்கும், உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் தொழிலாளர், வேலைவாய்ப்பு துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதுதவிர, பல முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.