LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 30, 2018

கனடா பெண்ணை திருமணம் செய்த ஜாக்கி சானின் புதல்வி ஹொங்காங் திரும்பினார்!

ஹொலிவூட் அதிரடி திரைப்படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள நடிகர் ஜாக்கி ஜான் ஹொங்காங் அழகு ராணி பட்டம் பெற்ற எலைன் என்ஜி யி லீய் என்ற பெண்ணுடன் கடந்த 1999-ம் ஆண்டளவில் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார்.
இந்த உறவின் மூலம் பிறந்த ஒரேயொரு பெண் குழந்தையான எட்டா என்ஜி சோக் லாம் (Etta Ng Chok Lam) என்பவருக்கு தற்போது 19 வயதாகிறது.
ஓரினச் சேர்க்கையில் ஆர்வம் கொண்ட எட்டா என்ஜி, கடந்த வருடம் கனடாவைச் சேர்ந்த அன்டி ஏட்டம் என்ற 31 வயது பெண்ணின் மீது காதல் வசப்பட்டார். கடந்த ஓராண்டாக தொடர்ந்த இவர்களின் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
கனடா நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டதாக நவம்பர் 8-ம் திகதி அந்த நாட்டு அரசு இவர்களுக்கு திருமண சான்றிதழ் அளித்துள்ளது. இந்த நிலையில், இந்த தம்பதியர் ஹாங்காங் நகருக்கு மீண்டும் திரும்பிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக, பிரபல தற்காப்பு கலை வல்லுனரான எட்டா என்ஜி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கு சென்றாலும் சொந்த ஊரில் இருப்பது போன்ற பாதுகாப்பான உணர்வு கிடைப்பதில்லை.
மனைவியும், மனைவியுமாக நாங்கள் தற்போது ஹொங்காங் நகருக்கு வந்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார். ஜாக்கி ஜானின் ஆதரவு இல்லாமல் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்த எட்டா என்ஜி, கடந்த ஏப்ரல் மாதம் வீட்டில் இருந்து வெளியேறினார்.
வசிக்க இடமின்றி தனது கனடா காதலியுடன் ஹொங்காங் நகரில் மேம்பாலத்துக்கு அடியில் தங்கி இருந்ததாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7