இத்தாலியை கடந்த ஒரு வாரமாக புறட்டி போட்ட புயல் நேற்று கரையை கடந்தது. புயலின் போது பெய்த பலத்த மழையால், வடக்கு வெனிடோ பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பலத்த காற்று வீசியதால் மரங்கள் விழுந்தும், வீடுகள் இடிந்தும் விழுந்ததால் 17 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இதுவரை 30 பேர் வரை பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் சிசிலி, தெற்கு சர்டினியா ஆகிய பகுதிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகின. மிலிசியா எனும் ஆற்றின் கரை உடைந்த வெள்ளத்தால், பல வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் 12 பேர் நீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகிறது. வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களை மூட நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.