(அசுவத்தாமா)
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் சேவைநலன் பாராட்டு விழாவும் வருட இறுதி நிகழ்வும் நேற்று(25) காலை பாசிக்குடா கடற்கரைத் தோட்டத்தில் நடைபெற்றது.
பிரதேசசெயலாளர் வன்னியசிங்கம் வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் சௌ.நேசராஜா, கணக்காளர் திருமதி.ரேவதன், சமுர்த்தி முகாமையாளர் கலாதேவன், கிராமசேவகர்கள், செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பிரதேச செயலகத்தில் பணியாற்றி வருடாந்த இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் , ஓய்வுநிலையில் உள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு மற்றும் நினைவுப் பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.உத்தியோகத்தர்களின் கலை மற்றும் பாடல் நிகழ்வுகளும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.