கடந்த 1888-ஆம் ஆண்டு மாகாஸா என்ற ஏரியில் 39 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பலில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக குறித்த கப்பலானது பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தையடுத்து குறித்த கப்பலில் இருந்த 16 பேர் காப்பாற்றப்பட்டனர்.
மீதமுள்ள பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இந்தக் கப்பலின் சிதிலமடைந்த பாகங்கள் கடலாய்வாளர்களால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கப்பலுக்குள் சைக்கிள் மற்றும் கார் ஒன்று முழுமையாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கப்பலிலுள்ள பொருட்களை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.