———- நமசிவாய வாழ்க ———-
இன்பமும் துன்பமும் யாவும் ஒன்றுதான் சரிகளும் பிழைகளும் அவரவர் நிலைகள்தான் என்பதை எமது பகுத்தறிவு எப்போதும் உணர்த்தினாலும் நடப்பது யாவும் நன்மைக்கே என்று எம் மனம் இலகுவில் ஏற்றுக்கொள்வதில்லை.
எமது மனத்தின் சபலங்களையும் சஞ்சலங்களையும் அடக்க இந்த பிரபஞ்சங்களின் தந்தையான அந்த சர்வேஸ்வரன் மீது பாரங்களை போட்டு எமது மனதில் இருள் அகற்றி சீராக்க சீவனில் ஒளியேற்றிக்கொள்வோம்.
விளக்கேற்றிய வீடு வீணாகி போய்விடுவதில்லை தீபத்தின் சுடரால் தீயவினைகளும் கூட உறிஞ்சபட்டும் விடுகின்றன. மணம் வீசும் மலர்களின் வாசமும் ஒளிவீசும் தீபத்தின் வெளிச்சமும் உள்ள இடங்களில் சிவமென்றும் பிரகாசித்து கொண்டிருக்கின்றது.
ஆகையால் மனத்தில் உள்ள இருள் அகற்ற சீவனில் ஒளியேற்றி சிவத்தை ஒளிரச்செய்வோம்.
சங்கரன் ஜெய சங்கரன் ️
சிவனடியான்