மட்டக்களப்பு புதிய
காத்தான்குடி 6 பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்
தந்தை மின்சாரம் தாக்கியதன்
உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி 6 , அன்வர் பள்ளி வீதி பகுதியை சேர்ந்த அகமட் லெப்பை முகமது அனிஸ் வயது 41 என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர்
மின்சாரம் தாக்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக
பொலிசார் தெரிவிக்கின்றனர்
இன்று அதிகாலை தனது
வீட்டு வேலைகளை செய்துகொண்டிக்கும் போது வீட்டில் இணைக்கப்பட்டுள மின்சார வயரில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கின் காரணமாக
மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்
உயிரிழந்தவரின் சடலம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் பிரேத
பரிசோதனைக்காக வைக்கப்பட்டு பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக
பொலிசார் தெரிவித்தனர்