———- நமசிவய வாழ்க ———-
கடமையின் தேவைகண்டு அனைத்துமே வேண்டினேனே
மடமையின் மாயை என்று எவருமே எண்ண வேண்டாம்
மடந்தையின் பாகனாரே திருவருள் தாரும் ஐயா
புலமையால் உம்மை பாடும் வரமதும் வேண்டும் ஐயா
சுத்தமாய் நானும் என்னை நித்தியம் ஆக்க என்று
பற்று அற்ற நிலையை எய்தி பக்குவம் ஆக வேண்டும்
சித்தமாய் தினமே எல்லாம் சிவத்திலே நிலைக்கவேண்டும்
மொத்தமாய் காலமெல்லாம் சிவமதாய் ஆகவேண்டும்
மதம் அதும் கடந்தே ஏகி மாயையை களையவேண்டும்
புனிதனாய் உன்னை தேடி உண்மையை காணவேண்டும்
காணும் எக் காட்சி எல்லாம்
சிவமதாய் தெரிந்த பின்னர்
இப் பிரபஞ்சம் அனைத்தில் எல்லாம் சிவம் அதை உணரவேண்டும்
சங்கரன் ஜெய சங்கரன்️
சிவனடியான்