
இந்த உணவகத்தை கடந்த 2000 ஆம் ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை ரோஜா தனது சொந்த செலவில் திறந்துள்ளார்.
நடிகை ரோஜா தற்போது ஐ.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
தனது தொகுதியில் உள்ள ஏழை எளிய மக்களின் பசியைத் தீர்க்க நடிகை ரோஜா கடந்த 17 ஆம் திகதி தனது பிறந்த நாள் அன்று மலிவு விலை உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகத்தில் முழு சாப்பாடு விலை ரூ.4 மட்டுமே.
ஆந்திராவில் உள்ள அண்ணா கன்டீன், கர்நாடகாவில் உள்ள இந்திரா கன்டீன், தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம் ஆகியவற்றைவிட ரோஜாவின் உணவகத்தில் சாப்பாட்டின் விலை குறைவாக உள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் ரோஜாவின் இந்த உணவகம், அவருக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா உணவகத்தில் ரூ.1க்கு இட்லி, 2 சப்பாத்தி 3 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், சாம்பார் சாதம் – புதினா சாதம் போன்றவை 5 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
