LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, November 5, 2018

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் 40 ஆவது நினைவுதின நிகழ்வும் புகழ்பூத்த புலவர்மணி நூல்வெளியிடும்


ஒரு சமூகத்தை வளர்த்தெடுப்பதில் எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் மிக முக்கியமானவர்கள் - அரச அதிபர் மா.உதயகுமார்

மட்டக்களப்பு மண் கலை, இலக்கிய பண்பாட்டு மரபுகளுக்கு பேர்போன மண்ணாகும். இம் மண்ணில் வாழும் கலைஞர்களை நாம் வாழும்போதே மதிக்கவேண்டும். கடந்த காலங்களில் எம் மண்ணின் பாரம்பரியங்களை எழுத்;தில் செதுக்கிச்சென்ற பலரை நாம் மறந்துவிட்டோம். ஒரு சமூகத்தை வளர்த்தெடுப்பதில் எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் மிக முக்கியமானவர்கள். அவ்வாறானவர்களை வாழும்போதே நாம் கௌரவிக்கவேண்டும்.
இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.   புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணிமன்றத்தின் ஏற்பாட்டில்  புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் 40 ஆவது நினைவுதின நிகழ்வும் புகழ்பூத்த புலவர்மணி நூல்வெளியிடும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் கலாநிதி சி.சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்றது.   
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அரசாங்கஅதிபர் மா.உதயகுமார் கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் க.பாஸ்கரன் கலந்து கொண்டார். இங்கு புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை பற்றிய காலமும் கருத்தும் வாழ்வியல் ஊடான ஒரு மீள் பார்வை எனும் தலைப்பில் நினைவுப்பேருரையினை கவிக்கோ வெல்லவூர் கோபால் நிகழ்த்தினார். நூல் அறிமுகத்தினை விரிவுரையாளர் நா.வாமன் நிகழ்த்தினார்.
இங்கு தொடர்ந்து பேசிய பிரதம அதிதி அரசாங்க அதிபர் மா.உதயகுமார்...
எமது மண்ணில் ஒர குறைபாடுள்ளது. எம்மவர்களை நாம் மதிக்கத்தவறுகின்றோம். கலைஞர்களை, எழுத்தாளர்களை, அறஞர்களை, சாதனையாளர்களை, நல்லது செய்கின்றவர்களை தேடிப்பார்ப்பதில்லை. எம் மண்ணில் வாழ்ந்த, வாழ்கின்ற எழுத்தாளர்கள், கலை, இலக்கியவாதிகளை நாம் கௌரவிக்கவேண்டும். அதுவும் வாழும்போதே வாழ்த்தவேண்டும். 
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை கிழக்குமண்ணின் ஓர் அடையாளமாவார். இவரது உள்ளதும் நல்லதும் என்ற கட்டுரை மிகச்சிறப்பானதாகும். இலங்கை திரு நாட்டின் கிழக்குமாகாண கலை, இலக்கிய வளர்ச்சியில் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை குறிப்பிடத்தக்க பங்களிப்பினை நல்கியுள்ளார். இவரது படைப்புக்களை காலத்திற்கு காலம் ஆவணப்படுத்தி வெளியிட்டுவரும் புலவர்மணிபெரியதம்பிப்பிள்ளையின் நினைவுப் பணிமன்றத்தின் செயற்பாட்டை பாராட்டுகின்றேன்.
இது போன்று எமது மட்டக்களப்பு மண்ணில் வாழ்கின்ற கலைஞர்களின் படைப்புக்களை , அவர்கள்பற்றிய வாழ்க்கை வரலாறுகளையும் ஆவணப்படுத்தவேண்டும். இதற்கு கலை, இலக்கிய அமைப்புக்கள் முன்வரவேண்டும். ஒரு கலைஞன் வேறு இடங்களில் புகழப்பட்டாலும் அவனது சொந்த இடத்தில் அந்த மண்ணில் புகழப்படுவதுதான் சிறப்புக்குரியதாக இருக்கும். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளைக்கு எத்தனையோ பட்டங்களும், கௌரவங்களும் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் அவரது சொந்தமண்ணில் 1950 ஆம் ஆண்டு மட்டுநகர் கலைப்பணிமன்றம் கொடுத்த புலவர்மணி என்ற பட்டமே இன்றும் நிலைத்திருக்கின்றது. இன்றைய தலைமுறை எம்மோடு வாழ்நத, வாழ்கின்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள், சமூகத்தின் மாற்றத்திற்குவித்திட்ட பத்திரிகையாளர்கள் போன்றவர்களின் வரலாற்றை தேடிப்பார்த்து கௌரவிக்கவேண்டும் என்றார்.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7