———- நமசிவய வாழ்க ———-
சித்தம் செதுக்கி சிவம் செய்து
சீவன் தனையும் சிவமாக்கி
புலன்கள் ஐந்தை பலமாக்கி
யுத்தம் தொடுக்க வருகின்றேன்
அன்பே எனது ஆயுதமாய்
அகிலம் வெல்ல முடியாதா?
கருணை என்ற பெருவாளால்
பகையை வீழ்த்த முடியாதா?
சிவனே எனக்கு அருள்தந்து
அழித்தல் பணியை அவன் தந்தால்
அவனே நானே முன்னின்று சிவனின் ஆணை முடிப்பேனே
குற்றம் குறைகள் கோபமெல்லாம்
இன்சொல் கொண்டு முறிப்பேனே
எரிச்சல்பொறாமை பகை எல்லாம்
கருணை சொல்லால் எரிப்பேனே
அதையும் தாண்டி பகைவந்தால்
அதனை அறுக்க முடியாதா?
ஆற்றும் பாவம் என்னெவென்று
அறிய செய்ய முடியாதா?
சர்வம் காக்கும் சர்வேசா
இதற்கு முடிவே கிடையாதா?
அழித்தல் பணியே உனதென்றால்
நீயே சொல்லு பரமேசா ..
.....புலன்கள் ஐந்தை பலமாக்கி
யுத்தம் தொடுக்க வருகின்றேன்...
அன்பே எனது ஆயுதமாய் .......
சிவனின் பதிலை நான் பெற்று
அவனின் பணியை நான் செய்து
அகிலம் வென்று முடித்திடவே...
புன்னகை என்னும் பூ மலர்ந்து
பூமி எங்கும் நிரம்பட்டும்
புத்தம் புதிய சமுதாயம்
இனிமேல் இங்கு பிறக்கட்டும்
யுத்தம் தொடுக்க வருகின்றேன்
சங்கரன் ஜெய சங்கரன்️
சிவனடியான்