இந்நிலையில் குறித்த திரைப்படத்தின் வீடியோ பாடல் ஒன்று சற்று முன்னர் வெளியாகியுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றிபெற்ற திரைப்படம் எந்திரன். இதனை இயக்குநர் சங்கர் இயக்கியிருந்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வசீகரன் என்கிற பேராசிரியராகவும், சிட்டி என்கிற ரோபோ கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராய் இதில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இதன் பிரமிக்க வைக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகளும், அதி நவீன தொழில் நுட்பமும் ரசிகர்களை வியக்க வைத்தன. இந்நிலையில் அதன் அடுத்த பாகமான 2.O தற்போது உருவாகியுள்ளது. இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடித்துள்ளார்.
இப்படம் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 10 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது. ஹொலிவூட் படங்களைப் போல் ஐமேக்ஸ் திரையரங்குகளில் 2.0 படத்தை திரையிட ஒப்பந்தம் செய்துள்ளனர். முதன்முறையாக 4D ஒலி தொழில்நுட்பத்தில் இதன் ஒலி அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
2.0 குறித்து வெளிவரும் அனைத்து அம்சங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலகம் முழுவதுள்ள ரசிகர்களுக்கு வரும் 29 ஆம் திகதி பெரும் விருந்தாக இப்படம் வெளிவரவுள்ளது.