(சிறப்பு நிருபர் தீபன்)
கார்த்திகை 27 மாவீரர் தினம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைக் கழக கலைஇ காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் அனைத்து பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் , விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஈகைச் சுடர் ஏற்றபட்டு உயிர் நீத்த மாவீர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இரத்த தானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.