———- நமசிவய வாழ்க ———-
நந்திக்கவசம் !
--------------------------
காப்பு:
தூயவிடை நாயகனை
மனதிலுரு ஏத்தி ஏத்தி
நந்தி கவாசமிதை
நாளும் படிப்போர்க்கு
பாவவினை அகன்றே போக
பரமனருள்கூடி இன்புறவாழ
நந்தி நாமம் நமசிவாய
நூல்:
பணிந்தே என்றும் நந்தி நாமம்
ஏற்றி போற்றி வணங்கியே யாரும்
கவச மிதனை பாடிடக் கூடும்
பாவங்கள் யாவும் ஒடி மறையும்
பிரதோச காலம் மனமது உருகி
சிந்தை முழுதும் நந்தியை எண்ணி
கொம்பின் நடுவில் சிவனைக் கண்டு
வேண்டிடும் வரங்கள் கூடிடும் ஆமே
நாட்டிய வேதம் சிவனிடம் கற்று
முனிவர்க்கு உரைத்த முதற்குரு அவரே
சித்தர்க்கு எல்லாம் சித்தன் சிவனின்
உத்தம தோழர் நந்தித் தேவர்
நினைத்தே உருகி மனத்தில் இருத்தி
வாழிபடும் அவர்க்கு அருளது தருவார்
குழந்தை செல்வம் நிச்சயம் கிட்டும்
குறைகள் யாவும் முழுதாய் நீங்கும்
அருகம் புல்லில் மாலை அணிந்து
புத்தியில் உள்ள யாவும் வேண்ட
காரிய சித்தி சாத்தியம் ஆகும்
அத்துடன் முத்தி சத்தியம் ஆமே
கரும்பே உணவாய் படைத்தே பாரும்
மங்களம் யாவையும் அள்ளிப் பெறுவீர்
நவகோள் ஏதும் தீங்கினை செய்யா
நந்தியின் நாமம் போற்றிடுவோர்க்கு
போற்றி போற்றி கைலாச நந்தி
போற்றி போற்றி அவதார நந்தி
போற்றி போற்றி அதிகார நந்தி
போற்றி என்றும் பெரியதோர் நந்தி
போற்றி போற்றி நந்தி போற்றி
போற்றி போற்றி முக்கண் போற்றி
நந்தியுந்தன் மான்மழு போற்றி
ஐவகை நந்தி போற்றி வாழ்வேன்
வாழ்க வாழ்க நந்தி வாழ்க
வாழ்க வாழ்க சிவ வாகனனே
வாழ்க வாழ்க சிவ கணத்தலைவா
முத்திக்கு அருளும் வித்தை குருவே
வாழ்க வாழ்க ஆவேச மூச்சு
வாழ்க வாழ்க அரனார் பக்தி
வாழ்க வாழ்க உந்தன் சித்தி
வசிஷ்டர் பேத்தி மணவாளவனே
டம்டம் டம்டம் டமரின் ஒசை
பம்பம் பம்பம் சங்கின் ஒசை
ஒலித்திட யானும் சிவமதை எண்ணி
திடமாய் என்னைக் காத்திட வேண்டி
நந்தி உந்தன் நாமம் உரைத்து
சிவன் சுமை தாங்கும் சிவனடியவனே
ஈசனைப் போல ஈஸ்வரப் பட்டம்
கைலை மலையின் பெருங் காவலனே
காக்க காக்க எந்தனைக் காக்க
காக்க காக்க கீர்த்தியும் புகழும்
காக்க எந்தன் சிரசினை காக்க
நெற்றியை என்றும் நேசா காக்க
மூக்கை பல்லை முக வாய் எல்லாம்
முனைப்பாய் என்றும் நந்தி காக்க
கழுத்தை கபாலம் கண்டம் கண்கள்
கைகள் கால்கள் தோள்கள் தாள்கள்
எண்சாண் உடம்பை முழுதாய் காக்க
எலும்பை நரம்பை உள்ளுடல் யாவும்
நோய் பிணி இல்லா என்னுடல் காக்க
குன்றா செல்வம் அருளிக் காக்க
நித்தம் உன்னை பாடி வணங்க
நற்கதி யாவும் அருளிட வேண்டும்
சங்கரன் இங்கே பாடிய கவசம்
சங்கடம் எல்லாம் தீர்திட வேண்டும்
அடியவர்க் எல்லாம் சிவன் அருள் கிட்ட
நந்தியே என்றும் அருளிடுவாயே
சரணம் சரணம் நந்தீஸ்வரனே
சரணம் சரணம் உன் தாள் சரணம்
சங்கரன் ஜெய சங்கரன் ❤️
சிவனடியான்🙏
Attachments area