
———- நமசிவய வாழ்க ———-
புவிவாழுயிர் முழுதாகவே புகழேந்தியே பாடி
புனலோடனல் மழுவேந்திய பெருமானடி தேடி
உமையாளுடனுடனாகிய உள்ளங்கவர் கள்வன்
எம்மானவன் எந்தனுடல் எண்ணமதில் தோன்ற
இன்னாநிலை இல்லாதினி இனிதே எனக்கருளும்
பெருமானவன் சிவனேயென சிந்தை முழுதாக
அம்மானவன் அருளாலினி அல்லல் ஏதுண்டு
செம்மானவன் உயிரோடுடல் அதுவேயெனதாக
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏
