———- நமசிவய வாழ்க ———-
தந்தன தானன தனதானா
தந்தன தானன தனதானா
சங்கரன் பாடலை கேளுங்கட
சங்கரன் மீததை பாடுங்கடா
தந்தன தானன தனதானா
தந்தன தானன தனதானா
ஆடித்திரியுமோர் கூத்தாடி
சுடலை மேவுமெம் தேவனடா
நீறினை பூசியே நின்றானே
நித்தியம் பக்குவம் தந்தானே
கங்கையை சடையில் தான் சூடி
மங்கையை பாகமாய் கொண்டானே
அண்டம் அனைத்திலும் கொண்டாடும்
மண்டையொடுடை நாதண்டா
நாகமணிகின்ற நாதன் தாள்
போற்றினேன் போற்றினேன் கொண்டாடி
தந்தன தானன தனதானா
தந்தன தானன தனதானா
மூலத்தமிழ் எங்கள் பேச்சிலெடா
ஆதிசிவன் எங்கள் மூச்சிலெடா
ஜாதியை இன்றே மூடுங்கடா
நீதியை இங்கே நாட்டுங்கடா
நானும்நீயும் இங்கே ஒருசாதி
ஆதித்தமிழ் எங்கள் உயிர்நாடி
ஆடும்பரமசிவன் பாதம் பணிந்தேத்தி
பாதிப்பிறையானின் நாமம் நினைக்கையிலே
இன்பத்தமிழுக்கு சங்கம் வளர்த்தவனாம்
அன்புச்சிவன் எங்கள் சைவச்சீராளான்
வைகையில் வெள்ளம் காட்டியவன்
செம்மனச்செல்விக்கு மண் சுமந்தான்
வாழ்கவே வாழ்கவே அரன்புகழ் வாழ்கவே
வாழ்கவே வாழ்கவே
அண்டசராசரம்
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏