(ஒரு நெடுங்கதையின் தொடக்கம்)
- பாலசுகுமார் -
கொட்டியாரத்தில் தன் அடுத்த நகர்வு நித்திலம் கொலிக்கும் முத்தூராக இருக்கட்டும் என கட்டளையிட்டான்.கோயிலுக்கு சற்று தூரத்தில் அமைக்கப் பட்டிருந்த பாடிவீடுகளில் வீரர்களின் உற்சாக அணிவகுப்பும் முத்தூரை நோக்கிய பயணத்துக்கான.உற்சாகமும் கரை புரண்டோடியது.எல்லா வேலைப்பாடுகளும் முடிவடைந்ததால் சிற்ப ஸ்தபதிகளும் புறப்பட தயாராகினர்.
கங்கை கரையில் தன் கால்களை நனைத்தபடி சரிந்து படுத்திருக்கும் மருத மரக் கிளைகளை சிம்மாசனமாக கொண்டு சிந்தனை வயப்பட்டான் .ராஜேந்திரன் இந்த ஈழக்கரையிலேயே இருந்து விடலாம் போலதெரிகிறது எத்தனை அழகு இந்த மண்ணுக்கு.ஈழத்தில் எங்கும் கானாத அபூர்வ அழகு கொடியாரத்துக்கு என மனம் நிறை மகிழ்விலிருந்தான் .
அவன் காதலி திரிபுவனையின் நினைவுகள் மாவலியின் அழகில் தெரிந்தது காவிரிக் கரையில் திரிபுவனையுடன் காதலில் மகிழ்ந்த நாட்களில் மூழ்கிப் போனான் ராஜேந்திரன்.இந்த எழிலையும் அழகையும் அவளும் காணவேண்டுமல்லவா அவளோடு இந்த மாவலி ஆற்றங்கரையில் .ஆகா எத்தனை இன்பமாக இருக்கும் என் காதலிக்கு ஒரு கனவு மாழிகை அமைத்தால் அது இங்குதான் என பல் வேறு எண்ணங்களில் குழம்பிபோனான் .தன்னுடய இந்த ஈழ வருகையின் தளபதியாக வழி நடத்தும் தங்கக் கால் வளை குருகுலத்து ராயனை அழைத்தான்.ஈழத்தில் பெற்ற வெற்றிகள் எல்லாவற்றுக்கும் துணை நின்ற செயல் திறன் மிக்க தளபதி அவன்.
ஆரவாரத்துடன் முத்தூரை நோக்கி சோழப் பெரும் படை புறப் பட்டது.யானைப் படையணி தலைவன் வேலப்பணிக்கன் ராஜேந்திரனை வணங்கி மன்னனுக்கான கஜ ராஜனை கொணர்ந்தான் கஜ ராஜனில் கம்பீரமாக பாய்ந்தான் ராஜேந்திரன்.தன் பிழிறலால் மகிழ்ச்சியயை வெளிப்படுத்த படையணி நகர்ந்தது.
தொடரும்