தனத்த தந்தன
தனதன தனதன
தனத்த தந்தன
தனதான
சடைக்குள் மதியணி
புடைக்கும் நதியொடு
எரிக்கும் விழியுடை
பெருமானே
உமைக்கு கணபதி
உவந்து அருளிய
உடுக்கை துடியிசை
உமைபாகா
உதிக்க முருகனை
உமிழ்ந்து தீயினில்
அழிக்க சூரனை
பணித்தாயே
படைத்து பைரவன்
பிரம்மன் தலைதனை
பிடுங்கி எறிந்ததை
நினைத்தேனே
மலைக்கு அதிபதி
தக்கன் தகர்ந்திட
பத்திர ரூபம்
தரித்தாயே
துடைக்க எந்துயர்
உடைக்க கவலையை
பெருக்கி நன்மையும்
தரவேண்டும்
நெருங்கி உந்தனை
உருகித் தமிழினில்
விரும்பி பாக்களும்
நான்பாடி
நிறைந்த மனதொடு
இசைத்த கவியினில்
உயர்ந்த சிவப்புகழ்
நானோதி
பனிக்குள் குளிரது
எனக்குள் நீயவன்
இருக்கும் வரமதை
பெறுவேனே
சங்கரன் ஜெய சங்கரன்️
சிவனடியான்