நமசிவாய போற்றி
நாதன் தாள் போற்றி
எக்கணமும் எனையகலா
இறைவனடி போற்றி
நேசமுடன் அவனடியர்
திருவடியும் போற்றி
நேயமுடன் சிவனடியே
போற்றி போற்றி
பாசமுடடை பரன்புகழும்
பரணி எங்கும் வாழ்க
பாகமடை உமையவளும்
தரணி போற்ற வாழ்க
நாகமுடை நாதனவன்
சுமைதாங்கி வாழ்க
நயமுடனே சிவமோதும்
சிவகணங்கள் வாழ்க வாழ்க
மெய்யாய் என்னுள்ளே
நின்ற சிவனருளே
பொய்யான என்னுடலில்
நிறைந்த சீவனுமாய்
ஐயா நீ என்னை
வழிகாட்டும் நல்லறிவே
ஆக்கி எனைக்காக்கும்
வையகத்தில் நற்குருவே
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏