பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலேயே அவருக்கு இன்று தீர்ப்பு கிடைத்தது.
மாலைதீவில் ஜனநாயக முறைப்படி தெரிவான மொஹமட் நஷீட் 2012ஆம் ஆண்டு அப்துல்லா யாமீன் ஆட்சியில் கைதுசெய்யப்பட்டு அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
எனினும் தன்னைக் கைதுசெய்து தவறானமுறையில் சிறைத்தண்டனை விதித்தமை அநீதியானது என்று மொஹமட் நஷீட் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அவர்மீது விதிக்கப்பட்ட 13ஆண்டு சிறைத்தண்டனையை ரத்துச்செய்து தீர்ப்பு வழங்கினார்.