டெல்லியில் உள்ள நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இதேபோல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில அலுவலகங்கள், கிளை கமிட்டி அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் நேருவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் 129வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “நமது முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
நேருவின் 129-வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட் பதிவில்
“நமது முதல் பிரதமரான பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளான இன்று அவரை நினைவு கூர்வோம். சுதந்திர போராட்டம் மற்றும் பிரதமராக பதவி வகித்த போது அவர் ஆற்றிய பங்களிப்பை நாம் நினைவு கூர்வோம்”. இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.