LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, November 9, 2018

இதோ ஆண்டவரின் அடிமை...10

'இதோ ஆண்டவரின் அடிமை ..' மிகவும் அற்புதமான வார்த்தைகள் அதலி அடங்கியிருப்பதோ ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்.

முற்றிலுமாகத் தன்னை  ஒருவருக்கு – அந்த இறைவனுக்கு ஒப்புவிக்கின்ற - ஆசைகள் நிறைந்த பருவத்தில் திளைத்து நின்ற ஒரு மங்கையின் மனப்பூர்வமான சம்மதம் தரும் அறிக்கை இது!

அடிமைத் தனத்திலே உழன்று நின்ற ஒரு இனத்திலே, விடுதலைக்காக ஏங்கி நின்ற இளம் பெண்ணாக மரியாள் நிச்சயம் வாழ்ந்திருப்பாள். மாறாக துடிப்பில்லாத மங்கையாக – ஒரு பேதையாக – அவள் இருந்திருப்பாளேயானால் வீட்டிற்குள் அவள் முடங்கியே இருந்திருப்பாள்.

அப்படி அவள் ஒரு பதுங்கிய பதுமையாக வாழ்ந்திருந்தாள் இறைவனின் பார்வை அவள் மேல் திரும்ப காரணங்கள் இருந்திருக்காது. மாறாக துடிப்புள்ள ஒரு பருவ மங்கையாக, தவிப்புள்ள ஒரு யூத இனப் பெண்ணாக, எதிர் கால வாழ்வை மனம்; நிறைந்த கனவுகளுடன் பார்த்து நின்ற ஒருத்தியாகவே அவளைக் கற்பனை பண்ண முடிகிறது. இதனால்தான் அவள் அழைக்கப்பட்டாள்.

தான் சார்ந்த இனத்தின் நலனில், விடுதலையில், தன்னினம் படுகின்ற துயரம் குறித்து கரிசனையும், அக்கறையும், கவலையும் அவள் கொண்டிருந்த காரணத்தினால்தான்  அவள் தெரிவு செய்யப்படுகிறாள்.

சின்ன விடயங்களில் அவள் பிரமாணிக்கம் உள்ளவளாக இருந்த காரணத்தினாலேதான் இறைவன் அவளைப் பெரியதொரு நிலைக்கு உயர்த்த தீர்மானிக்கின்றார்.

தூது சொல்லப்படுகின்றது. அவளோ, வேத நூல்களை வாசித்து அவற்றை மனதிருத்தி வாழ்ந்து நின்றவள், காலத்தின் கோலத்தை அதன் மாறுதல்களூடே அவதானித்து வந்தவள், அவளும் மெசியாவுக்காகக் காத்திருந்தவள்தான். காலம் வரப்போகின்றது, மீட்பு நெருங்கி விட்டது, இதோ மீட்பர் வரும் வேளை நெருங்கி விட்டது என்ற உள்ளுணர்வு அவளிடம் இருந்திருக்கிறது.

தூதின் சேதி கேட்டதும் அவள்மனதிலே ஒரு தயக்கம்.குருவியின் தலையிலே பனங்காயா? ஆற்பமான என்னில் அற்புத வரமா? கடவுளை – அமசியாவை – மீட்பை மண்ணுலகிற்குத் தரும் ஊடகம் நானா? காலங்கள் காத்திருக்கின்ற மீட்பரை என் கர்ப்பா தாங்கப் போகின்றது? என்னால் இது ஆகுமா? அதற்கு நான் தகுதியுடையவளா? என் கற்பனை உலகு இனி வேறு பாதை காணப் போகின்றதா?

பேரிய பொறுப்பை ஏற்கும் தயக்கம் சாதாரணமானதே! துயங்கும் அவள் தேற்றப்படுகின்றாள், ஊக்கப்படுத்தப்படுகின்றாள். தன்னை முழுவதுமாக ஒரு அடிமையாகப் பண்ணுகின்றாள். தன் உயர்வைத் தானே தேடிக்கொள்ளுகின்றாள். தீர்மானம் அவளது – முடிவை எடுக்கிறாள்!

இறைவனுக்காக - இந்த மனுக்குல மீட்புக்காகத் தான் ஒரு துரும்பாக உதவுவதை அவள் ஏற்றுக் கொள்ளுகின்றாள். அதையும் ஒரு பெருமைக்குரியவளாக எண்ணியல்ல, மாறாக ஒன்றுமில்லாதவளாக, அனைத்தையும் தாரை வார்த்துவிட்டவளாக, கடவுள் என்கின்ற தன் அடையாளத்தையே வி;ட்டுக் கொடுத்து அடிமைக் கோலம் பூண்ட ஆண்டவனுக்கேற்றவளாக அவளும் தன்னை அடிமை செய்கிறாள். தனது கனவுகள், ஆசைகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்பக்கள், தனக்குண்டான ஆற்றல் அறிவு அனைத்தையும் ஒரு நொடிப் பொழுதிலே துறந்து விட்டு ஒன்றுமில்லை என்றவளாகித தன் மீது புதிய அடையாளம் ஒன்றைப் பேர்த்திக் கொள்ளுகின்றாள். தாழ்ச்சியும், விவேகமும், அடக்கமும், பணிவும் அவள் அணிகலன்களாகின்றன.

தன்னை வெறுமையாக்கியதன் மூலம் நிறைவைக் கண்ட அவள் நமக்குத் தரும் சேதியும் அதுதான். நான் என்ற அடையாளத்தை நம் தனி வாழ்விலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் சரி பெரிதுபடுத்தி நாம் நிற்கும்வரை உயர்வு என்பது தொலை தூர நட்சத்திரம். அனைத்தையும விட்டுக் கொடுத்து அயலவனுக்காகவும். ஆண்டவனுக்காகவும் வாழ முற்படுபவர்க்கு சொர்க்கம் கூட வாசல் படியில் காத்து நிற்கும் என்து நிச்சயம்!

ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்





 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7