அகிலத்தில் அனைத்து உயிர்களும் காரணங்கள் இன்றி உருப்பெறுவதில்லை.
உருப்பெற்ற உயிர்கள் எல்லாம் காரணத்தின் காரியங்களை இலகுவில் அறிந்து விடுவதுமில்லை.
காரியத்தின் நோக்கங்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறிவிடுவதும் மாற்றப்பட்டு விடுவதும் அகிலத்தில் சாதாதரணமானதே..
நோக்கங்கள் மாற்றப்பட்டாலும் தன் ஆக்கத்தை அறிந்த மனிதன் கொள்கையளவிலும்
ஞானத்தின் சிறப்பிலும் சிவத்தின் தொடுப்பிலும் உள்ள மனிதன் தன் அபரித சக்தியாலும்
தான் வந்த காரியத்தை சாதித்தே செல்கின்றான்.
கேட்ட கனப்பொழுதில் எவனுக்கும் ஞானம் கிடைப்பதும் இல்லை அத்தோடு தன் உள்ளத்தைதானே அறிய எவனுக்கும் நேரம் கிடைப்பதுவும் இல்லை.
ஆகையால் கர்மத்தின் கடமைகளை சூழ்நிலைகளை கொண்டு அளவெடுத்துக் கொள்வோம் .
எம்மை முற்றாக முயன்றவரை அறிந்து கொள்வோம் அத்தோடு சக்கரங்களின் தன்மையையும் அச்சரங்களின் தன்மையையும் பூரணமாய் புரிந்து கொள்வோம்.
இதனைவிட இறுதிவரை உறுதியாக நாம் நம்பும் தர்மதின்பால் நடந்து வந்த பயணத்தின் நோக்கத்தை இனிதே நிறைவேற்றிக்கொள்வோம்.
சங்கரன் ஜெய சங்கரன் ️
சிவனடியான்