பனைமரக் காட்டின்
ஒற்றைச் செம்மண் பாதையில்
மண்ணின் புழுதியோடு
காற்று வெளியெங்கும்
பிசு பிசுக்கும்
உன் கூந்தல் ஈரம்
சொல்லாத கதையாய்
எழுதாத கவிதையாய்
எத்தனை எத்தனை
ரகசியங்கள்
புதைந்து கிடக்கிறது
விழியின் இமை தகர்த்து
வழிந்தோடும் கண்ணீரில்
கசிந்துருகும்
இதயத்து காதலிடை
துளிர்த்தெழுந்த
என் பிரியம்
பற்றி எரிகிறது
-பிரபஞ்சப்பிரியன்-
ஒற்றைச் செம்மண் பாதையில்
மண்ணின் புழுதியோடு
காற்று வெளியெங்கும்
பிசு பிசுக்கும்
உன் கூந்தல் ஈரம்
சொல்லாத கதையாய்
எழுதாத கவிதையாய்
எத்தனை எத்தனை
ரகசியங்கள்
புதைந்து கிடக்கிறது
விழியின் இமை தகர்த்து
வழிந்தோடும் கண்ணீரில்
கசிந்துருகும்
இதயத்து காதலிடை
துளிர்த்தெழுந்த
என் பிரியம்
பற்றி எரிகிறது
-பிரபஞ்சப்பிரியன்-
